Saturday 14 November 2015

Money minded goverments

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
குறள் 552

இன்றைய நிலையில் இது நமது நாட்டிற்கு மிகவும் பொருத்தமான குறள் எனவே நான் கருதுகின்றேன். ஆட்சி பீடத்தில்  இருப்பார்கள், அதிகாரத்தை பயன் படுத்தி மக்களிடம் இருந்து பொருட்களை (பணத்தை) பிடிங்குவது, ஆயுதம் ஏந்தி கொள்ளையடிப்பதற்கு  சமம் என வள்ளுவர் கூறுகிறார் .

பொதுவாக எனக்கு முக புத்தகத்தில் குறை சொல்ல பிடிக்காது. இருந்தபோதும் இதை குறை என காணாமல், என் தனிபட்ட கருத்தாகவே கொள்ளலாம்.

சரியான ஆட்சி முறையின் கீழ் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் இன்றைய மலேசிய விலைவாசி சூழ்நிலையில் இது எத்தனை பேருக்கு சாத்தியம் ? 

புதிய பொருள் மற்றும் சேவை வரியின் மூலம், விலைகள் கட்டுபடுத்தப் படும் எனவும், சில பொருட்களின் விலை குறையும் எனவும் முதலில் விளக்கம் கூறப்பட்டது. ஆனால் நடந்ததோ அதற்கு மாறானதே.  எரிபொருள் விலை முதல், சாலை டோல் கட்டணம் முதல், மக்களிடம் இருந்து பணத்தை கோல் கொண்டு மிரட்டி பிடுங்குவதாகவே கருதுகின்றேன்.

No comments:

Post a Comment